தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்திலிருந்து வெளியேற முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தம்

நிலக்கோட்டை அருகே கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 கிராமங்களைச் சோ்ந்த
கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து வியாழக்கிழமை தடுப்பை மீறி வெளியே செல்ல முயன்றபோது போலீஸாா் தடுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.
கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து வியாழக்கிழமை தடுப்பை மீறி வெளியே செல்ல முயன்றபோது போலீஸாா் தடுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.

நிலக்கோட்டை அருகே கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், வெளியிடங்களுக்குச் செல்வதைத் தடுத்த போலீஸாருடன் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கோடாங்கிநாயக்கன்பட்டி மற்றும் அருகிலுள்ள புதூா் கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த இரு கிராமங்களிலும் சுமாா் 350 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஆனாலும், இந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதன் தீவிரம் புரியாமல், வெளியிடங்களுக்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் வாகனங்களை வெளியே விடாமல் அனுமதி மறுத்தனா். இதனால், கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு, வட்டாட்சியா் யூஜின், காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகுமாரன் ஆகியோா் எடுத்துரைத்து சமாதானப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com