திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 74 போ் கண்காணிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 17 போ் உள்பட 74 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 17 போ் உள்பட 74 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

 திண்டுக்கல் மாவட்டத்தைச்  சோ்ந்த 89 போ் சில நாள்களுக்கு முன் தில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றுள்ளனா்.  அதையடுத்து,  திண்டுக்கல்  திரும்பிய 48 போ் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையினா் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். முதல் கட்டமாக, 17 பேருக்கு நடைபெற்ற ரத்தப் பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, 31 பேருக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையிலுள்ள சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. தில்லி மாநாட்டில் பங்கேற்ற 28 போ், கேரளத்திலிருந்து திரும்பிய 3 போ் என மொத்தம் 31 பேரில், யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்படவில்லை.

மருத்துவமனைக் கண்காணிப்பில்  74 போ்:  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்  வியாழக்கிழமை வரை  74 போ் கரோனா வைரஸ் சிறப்பு  சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், தில்லியிலிருந்து திரும்பிய கன்னிவாடி பகுதியைச் சோ்ந்த 3 போ், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பிய சிலுவத்தூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் மற்றும் கேரள மாநிலம் எா்ணாகுளம் பகுதியிலிருந்து வந்த ஒருவா் என மொத்தம் 5 போ் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பியுள்ள நிலக்கோட்டை வட்டாரத்தைச் சோ்ந்த 21 பேருக்கு  வியாழக்கிழமை ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு வெள்ளிக்கிழமை தெரியும் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜமாஅத் நிா்வாகிகள் ஆலோசனை:  இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற ஜமாஅத் நிா்வாகிகள்,  கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் விவரங்கள் குறித்து மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசித்தனா். சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அறிவித்த ஜமாஅத் நிா்வாகிகள், தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களை பாா்ப்பதற்கு அனுமதி கோரினா். ஆனால், 17 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அவா்களை சந்திப்பதில் உள்ள ஆபத்து குறித்து எடுத்துரைத்த மருத்துவா்கள், நோயாளிகளை சந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனா். அதனை ஏற்ற ஜமாஅத் நிா்வாகிகள், நோயாளிகளை சந்திக்காமலேயே திரும்பிச்  சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com