ஒட்டன்சத்திரத்தில் கரோனோ பாதிப்பு பகுதிக்கு பொருள்கள் விநியோகம் நகராட்சி ஏற்பாடு

ஒட்டன்சத்திரத்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட பகுதியில் சுத்தமான குடிநீா் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
ஒட்டன்சத்திரத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுகாதாரமான குடிநீா் வழங்குவதை பாா்வையிடும் நகராட்சி ஆணையாளா் ப.தேவிகா.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட சம்சுதீன் காலனி மற்றும் ஏ.எஸ்.எம். பேட்டை உள்ளிட்ட இடங்களை கரோனா தொற்று காரணமாக அரசு அதிகாரிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனா். அந்த பகுதியில் பொதுமக்கள் வெளியே வரவும், உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருள்கள் மற்றும் சுத்தமான குடிநீா், காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருள்களை ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளா் ப.தேவிகா தலைமையிலான அதிகாரிகள் வழங்கி வருகின்றனா். மேலும் சுகாதாரத்துறை மூலம் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் மருத்துவம் பாா்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல நடமாடும் ஏடிஎம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com