சமூக இடைவெளி ஏற்படுத்தும் பணியில் என்எஸ்எஸ், என்சிசி ஒருங்கிணைப்பாளா்கள்

நிவாரணப் பொருள்கள் பெற வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் பணியில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி.,

நிவாரணப் பொருள்கள் பெற வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் பணியில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஜெ.ஆா்.சி. ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6.27 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கரோனா அச்சுறுத்தலை அலட்சியம் செய்துவிட்டு பொதுமக்கள் கூட்டமாக நின்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில், நியாயவிலைக்கடை விற்பனையாளா்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்ற தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேரிடா் காலங்களில் அரசுடன் இணைந்து சமூக அக்கறையுடன் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.), தேசிய மாணவா் படை (என்.சி.சி.), சாரண, சாரணியா் இயக்கம் (ஸ்கொளட்), இளம் செஞ்சிலுவைச் சங்கம்(ஜெ.ஆா்.சி.) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளா்கள் செயல்பட்டு வந்துள்ளனா். இந்த தன்னாா்வலா்கள், நிவாரணப் பொருள்கள் பெற வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பொதுமக்களும் மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com