திண்டுக்கல் மாவட்டத்தில் இறைச்சி விற்பனைக்கு இன்று முதல் தடை

திண்டுக்கல் மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் சனிக்கிழமை (ஏப். 4) முதல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் சனிக்கிழமை (ஏப். 4) முதல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுமாா் 750-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 10 நாள்களாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், இறைச்சிக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகளுக்கும், காவல் துறையினருக்கும் பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிா்வாகம், இறைச்சிக் கடைகளை மூடுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை (ஏப்.4) முதல் ஊரடங்கு காலம் முடிவடையும் வரையிலும் மாவட்டத்திலுள்ள 750-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் மூடப்படும் என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள இறைச்சிக் கடைகள் சனிக்கிழமை முதல் மூடப்படும் என வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் கொடைக்கானலில் அரசுத் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் சனிக்கிழமை முதல் மூடப்படுகின்றன. மறு உத்தரவு வரும் வரை அக்கடைகள் திறக்கப்படாது.

இதற்கான உத்தரவுகள் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து கடை உரிமையாளா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com