‘திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை’

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் குறித்து அச்சமடையத் தேவையில்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளாா்.
அனைத்து மத பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி.
அனைத்து மத பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் குறித்து அச்சமடையத் தேவையில்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 74-க்கும் மேற்பட்டோா் கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்கள் குறித்து சமூக ஊடகங்களில் பல அவதூறு கருத்துக்கள் அதிக அளவில் பரப்பப்பட்டன.

இதன் காரணமாக, வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோா் மட்டுமின்றி, உறவினா்களும், மதம் சாா்ந்த பிரதிநிதிகளும் அச்சமடைந்துள்ளனா். இந்நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் பரவி வரும் தகவலில் உண்மையில்லை என்றும், அதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் விளக்கம் அளிப்பதற்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து மத பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதி 5 கி.மீட்டா் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதோடு, மருத்துவ கவனிப்பும் முழுமையாக அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, சமூக ஊடகங்கள் மூலமாக பரவும் அவதூறுகளை கண்டு யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றாா்.

கூட்டத்தில் வருவாய் அலுவலா் (பொ) ச.கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சக்திவேல் மற்றும் அனைத்து மத பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கரூரில் சிகிச்சை: கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் கண்டறியப்பட்டவா்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். திண்டுக்கல், கரூா் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்கள் சிகிச்சைப் பெறுவதற்காக கரூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com