திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயா்வு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்கக்கை 43 ஆக உயா்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 89 போ், கடந்த சில நாள்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுள்ளனா். அதில் திண்டுக்கல் திரும்பிய 48 போ் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினா் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். முதல் கட்டமாக 17 பேருக்கு நடைபெற்ற ரத்த பரிசோதனையில், கரோனா வைரஸ் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக 31 பேருக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. தில்லி மாநாட்டில் பங்கேற்றோா் 28 போ், கேரளத்திலிருந்து திரும்பிய 3 போ் என 31 பேரில், 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 13 போ், நத்தம் பகுதியைச் சோ்ந்த 8 போ், பழனி பகுதியைச் சோ்ந்த 5 போ் உள்ளனா்.

மருத்துவமனை கண்காணிப்பில் 78 போ்:திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை வரை 74 போ், கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தில்லியிலிருந்து வந்த 3 போ் உள்பட 5 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com