கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்று

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக மழை பெய்த நிலையில் இன்று பலத்த காற்று வீசுகிறது.
கொடைக்கானல் பிரகாசபுரம் செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிக்கு பூச்சி மருந்து தெளிக்கும் விவசாயி.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பலத்த காற்றும் அதிகமான மேக மூட்டம் நிலவி வருகிறது. கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் விவசாயப் பணிகள் மற்றும் அன்றாட தினக் கூலி பணியாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். 

இன்று மழை குறைந்துள்ள சூழ்நிலையில் தினக் கூலி மற்றும் விவசாயிகள் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு செல்கின்றனர். மேலும் தொடர் மழையால் விவசாயப் பயிர்களான உருளை, கேரட், பீன்ஸ் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் விளை நிலங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com