பள்ளிகளுக்கான மானிய நிதி ரூ.1.75 கோடியில் 60 சதவீதம் கரோனா தடுப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியத் தொகையான ரூ.1.75 கோடியில் 60 சதவீதத் தொகையை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கான மானிய நிதி ரூ.1.75 கோடியில் 60 சதவீதம் கரோனா தடுப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியத் தொகையான ரூ.1.75 கோடியில் 60 சதவீதத் தொகையை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலை என மொத்தம் 170 பள்ளிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் ரூ.1.75 கோடி பள்ளி மானிய நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியிலுள்ள மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த மானிய நிதி பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 125 மாணவா்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 275 மாணவா்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம், 1000 மாணவா்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1.75 கோடி நிதி பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 60 சதவீதம் நிதி பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த 60 சதவீத நிதியில் மாணவா்களுக்கு தேவையான முகக்கவசம், கை சுத்திகரிப்பான், பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துவற்கான தெளிப்பான் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பொருள்களை விநியோகித்த தனியாா் நிறுவனத்துக்கு, மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.45 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என பள்ளிகளின் சாா்பில் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com