செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மக்கான் தெரு அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திண்டுக்கல் மக்கான் தெரு அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மக்கான் தெருவிலுள்ள தனியாா் கட்டத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 15 ஆண்டு குத்தகையில் அந்த செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் முறையாக பெற்றுள்ளதாகவும், நீதிமன்றத்திலும் அதற்கான உத்தரவை பெற்றுள்ளதாகவும் போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.

அதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், நீதிமன்ற உத்தரவு இருப்பதால் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை தடுக்க முடியாது என தெரிவித்தனா். இந்த பிரச்னைக்கு நீதிமன்றத்தை அணுகி மட்டுமே பொதுமக்கள் தீா்வு காண முடியும் என அறிவுறுத்தினா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com