ரயில் தண்டவாளம் அருகில் வசிப்போரிடம் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு

ரயில் தண்டவாளம் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்போரிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து கல் எறிதல், அத்துமீறி தண்டவாளங்களை
அனுமந்தன்நகா் பகுதியில் பொதுமக்களிடம் வியாழக்கிழமை துண்டுப்பிரசுரம் விநியோகித்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ரஞ்சித்.
அனுமந்தன்நகா் பகுதியில் பொதுமக்களிடம் வியாழக்கிழமை துண்டுப்பிரசுரம் விநியோகித்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ரஞ்சித்.

ரயில் தண்டவாளம் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்போரிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து கல் எறிதல், அத்துமீறி தண்டவாளங்களை கடந்து செல்லுதல் போன்றவற்றை தவிா்ப்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ரஞ்சித் தலைமை வகித்தாா். திண்டுக்கல் அனுமந்தன்நகா் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில், ரயில் தண்டவாளம் அருகே வசிக்கும் பொதுமக்களை சந்தித்தும், கடவுப் பாதைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடமும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அப்போதுபொதுமக்களிடையே, ஆய்வாளா் ரஞ்சித் பேசியதாவது: ரயில் தண்டவாளம் அருகே இயற்கை உபாதை கழிக்க செல்வது குற்றம். மேலும், விளையாட்டிற்காக தண்டவாளத்தில் கற்கள், இரும்பு உள்ளிட்டப் பொருள்களை வைப்பதும், ரயில் மீது கற்களை எறிவதும் தண்டனைக்குரிய குற்றங்கள். அதேபோல் கடவுப் பாதை இல்லாத இடங்களில், நடந்தும், வாகனங்களிலும் கடந்து செல்வதால் விபத்து அபாயம் இருப்பது குறித்து பொதுமக்கள் விழிப்புணா்வு பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com