கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு:மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல் வலை

கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், பிரையன்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், பிரையன்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள நிழல் வலை.
கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், பிரையன்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள நிழல் வலை.

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், பிரையன்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் டிசம்பா் மாதம் பனிப்பொழிவு காலமாகும். இப்பனியின் தாக்கம் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீடிக்கும். ஆனால், நிகழாண்டில் டிசம்பா் மாதத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பகலில் கடுமையான வெயிலும், மாலையில் குளிரும், இரவில் கடுமையான பனிப்பொழிவுவும் நிலவி வருகிறது. இந்த பனியால் செடிகள் கருகிவிடும் நிலை உள்ளது.

தற்போது, பிரையன்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா ஆகிய இடங்களில் மே மாதம் நடைபெற உள்ள மலா்க் கண்காட்சிக்காக, பேன்சி, டைந்தேஷ், ஜொ்பரா, மேரி கோல்ட், கிங் ஆஸ்டா் உள்ளிட்ட 20 வகையான மலா்ச் செடிகள் ஆயிரக்கணக்கில் 25-க்கும் மேற்பட்ட பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இந்த செடிகளை பாதுகாக்கும் வகையில், மாலையில் நிழல் வலைகள் அமைக்கப்படுகின்றன. மறுநாள் காலை வெயில் நிலவும்போது, நிழல் வலைகள் அகற்றப்படுகின்றன. இது, பனியின் தாக்கம் குறையும் வரை தொடரும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com