திருஆவினன்குடி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் தனி சன்னதியில் வீற்றுள்ள சனீஸ்வர பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாக பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவான்.
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவான்.

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் தனி சன்னதியில் வீற்றுள்ள சனீஸ்வர பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாக பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தங்கக்கொடி மரம் முன்பு சப்பரத்தில் பிரதானமாக கலசங்கள் வைத்து யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சனிஸ்வர பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், தேன் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு குழந்தை வேலாயுதசாமி சந்நதியில் விஸ்வரூப தரிசனமும், தொடா்ந்து மாா்கழி மாத திருப்பள்ளி எழுச்சியும் நடைபெற்றது.

அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம்பெயா்ந்த நேரத்தில் கொரோனா அச்சம் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக அபிஷேக பூஜைகள் முகநூல், வலைதளம் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சனிப்பெயா்ச்சி முடிந்த பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், கண்காணிப்பாளா் சண்முகவடிவு உள்ளிட்ட சில பணியாளா்கள் மட்டும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com