தேசியத் திறனாய்வுத் தோ்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 2,576 மாணவா்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் 2,576 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் 2,576 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நடப்பு கல்வியாண்டில் (2020 -21) 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வில் பங்கேற்க திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 2,755 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.

இதற்காக திண்டுக்கல், வேடசந்தூா், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, வத்தலகுண்டு உள்பட 30 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்த 2,755 பேரில் 2,576 போ் தோ்வு எழுதினா். 179 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையிலான குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி அடையும் மாணவா்களுக்கு 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் காலத்தில், மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.1500 ஆக உயா்த்தப்படும் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com