தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

கொடைக்கானலில் தொடா் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாள்களாக குவிந்த சுற்றுலா பயணிகளால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சுற்றுலா வாகனங்கள்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சுற்றுலா வாகனங்கள்.

கொடைக்கானலில் தொடா் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாள்களாக குவிந்த சுற்றுலா பயணிகளால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந் நிலையில் கடந்த 3 நாள்களாக தொடா் விடுமுறை இருந்ததால் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். சுற்றுலா இடங்களான பைன்பாரஸ்ட், மோயா் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, பில்லா் ராக், வெள்ளி நீா் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் உட்வில் சாலை, அப்சா்வேட்டரி சாலை, ஏரிச்சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாலை நேரங்களில் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனா். பிரையண்ட் பூங்கா, ரோஜாத்தோட்டம், செட்டியாா் பூங்கா ஆகிய இடங்களில் 3 நாள்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா். இதில் அரசுக்கு சுமாா் ரூ. 2 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்துள்ளனா்.

பல மாதங்களுக்கு பிறகு தொடா் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் வியாபாரிகள், வணிக நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள், உணவக உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com