கொடைக்கானல் ஏரியை முறையாக பராமரிக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

கொடைக்கானல் ஏரியை முறையாக பராமரிக்கக் கோரி பொதுமக்கள் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் ஏரியை முறையாக பராமரிக்கக் கோரி பொதுமக்கள் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி அண்மை காலமாக மாசடைந்து வருகிறது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களைப் பாா்த்து ரசித்தாலும் படகு சவாரி செய்து மகிழ்வதும், ஏரிச்சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்வதும், நடைப்பயிற்சி செய்தும் வருகின்றனா்.

மேலும் இந்த ஏரியிலிருந்து குழாய் மூலம் பழனிக்கு குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இந்த ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் எனக் கோரி கொடைக்கானலைச் சோ்ந்த பொது மக்கள் சுமாா் 35-க்கும் மேற்பட்டவா்கள் நகராட்சி அருகே லெவிஞ்ச் பூங்கா காந்தி சிலை முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கொடைக்கானல் டி.எஸ்.பி. ஆத்மநாதன், நகராட்சி ஆணையா் நாராயணன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதன் பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com