மாநகராட்சியின் சேவை அடிப்படையில் தரக் குறியீடு: பிப்.29 வரை கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் அடிப்படையில் திண்டுக்கல் மாநகராட்சியின் தரக் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு, பிப்ரவரி 29ஆம் தேதி வரை இணைய வழியில் கருத்துக்களை பதிவு

பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் அடிப்படையில் திண்டுக்கல் மாநகராட்சியின் தரக் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு, பிப்ரவரி 29ஆம் தேதி வரை இணைய வழியில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகன் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசின் வாழ்க்கை குறியீட்டின் எளிமைத் திட்டத்தின் கீழ், இந்தியாவிலுள்ள 114 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை உள்ளிட்ட 12 மாநகராட்சிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த நகரங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி, போக்குவரத்து, மருத்துவம், பாதுகாப்பு (காவல்துறை), பொருளாதாரம் உள்ளிட்ட நிலைகளில் மதிப்பீட்டினை அறிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

மத்திய வீட்டு வசதி மற்றும் வாழ்வாதார அமைச்சகத்தின் மூலம் மக்களின் வாழ்வாதார குறியீடுகளை அளவீடு செய்து, தரக் குறியீட்டுடன் ஒப்பீடு செய்வற்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வாழ்க்கை தரம் குறித்து,

 இணைய தள முகவரியில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். கல்வி தரம், மருத்துவம், போக்குவரத்து, வாழ்வதற்கு பாதுகாப்பானதா, காற்று மாசுபாடு, மின்சார விநியோகம், பசுமை அளவு போன்ற வினாக்கள் இடம் பெறும். இக்கணக்கெடுப்பில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் நிகழ்நிலை சேவை(ஆன்லைன் சா்வீஸ்) குறித்து வலைத்தளத்தில் மக்களின் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாநகருக்கு தரக் குறியீடு நிா்ணயிக்கப்படும். பொதுமக்கள் இணையதளம் வழியாக கருத்துகளை பதிவேற்றம் செய்வதற்கு பிப்ரவரி 29ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்படும் என்றாா். அப்போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளா்கள் மாரியப்பன், சுவாமிநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com