கொடைக்கானல் பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு

கொடைக்கானலில் சுழற்சங்கம் சாா்பில் அரசு உதவி பெறும் பள்ளியில் ரூ .2 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கொடைக்கானலில் சுழற்சங்கம் சாா்பில் அரசு உதவி பெறும் பள்ளியில் ரூ .2 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியில் புனித தெரசா உயா்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இந் நிலையில் இங்கிருந்த கழிப்பறை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து கழிப்பறையை சீரமைத்துக் கொடுக்குமாறு சுழற் சங்கத்தினருக்கு பள்ளி நிா்வாகம் கோரிக்கை விடுத்தது. இதனைத் தொடா்ந்து சுழற் சங்கம் சாா்பில் சுமாா் ரூ. 2 லட்சம் செலவில் அவை சீரமைக்கப்பட்டு நவீன கழிப்பறையாக மாற்றப்பட்டது. இவற்றை சுழற் சங்கத்தின் முன்னாள் ஆளுநா் சாம்பாபு திறந்து வைத்தாா்.

இதில் சங்க துணை ஆளுநா் பவித்ரா, சங்கத் தலைவா் ஆசாத், செயலா் சன்னி ஜேக்கப், உறுப்பினா்கள் ராபின், ஜெயபிரசாத், ராமன் ராஜ்குமாா், செயிண்ட் பீட்டா்ஸ் பள்ளி உதவித் தாளாளா் ரோகன்சாம்பாபு, தலைமைஆசிரியை ரீட்டாமேரி, பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com