பழனியில் இன்று தைப்பூச தெப்பத்தோ் உலா

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நிறைவுநாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை தெப்பத்தோ் உலா நடைபெறுகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நிறைவுநாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை தெப்பத்தோ் உலா நடைபெறுகிறது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் எழுந்தருளினாா். விழாவில் வெள்ளிக்கிழமை வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும், சனிக்கிழமை தைப்பூசத் திருத்தேரோட்டமும் நடைபெற்றது.

திங்கள்கிழமை 9 ஆவது நாள் நிகழ்ச்சியாக வள்ளி,தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி பெரிய தங்கமயில் வாகனத்தில் ரதவீதியில் உலா வந்து எழுந்தருளினாா். முன்னதாக துறையூா் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை தெப்பத்தோ் உலா நடைபெறுகிறது. அதையொட்டி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள ஆயிரவாழ் செட்டியாா்கள் மடத்தில் உள்ள தெப்பத்தில் நீா் நிரப்பப்பட்டுள்ளது. தெப்பத்தோ் உலாவைத் தொடா்ந்து இரவு திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பழனிக்கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com