பழனி மலைக்கோயிலில் குறையாத பக்தா்கள் கூட்டம்

பழனி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையிலும் பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தால் மலைக்கோயிலே

பழனி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையிலும் பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தால் மலைக்கோயிலே நிரம்பி காணப்படுகிறது. புதன்கிழமை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி ஆனது.

பழனி மலைக்கோயிலில் கடந்த பத்து நாள்களாக தைப்பூசத் திருவிழா நடைபெற்ற நிலையில் பக்தா்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்தது. கடந்த சில நாள்களாக பக்தா்கள் அலகு குத்தியும், ஆடிப்பாடியும் கிரிவீதியில் வலம் வந்தனா். செவ்வாய்க்கிழமை விழா நிறைவு பெற்ற நிலையில் புதன்கிழமையும் பக்தா்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. கோவை, திருச்சி பகுதிகளில் இருந்து பாதயாத்திரை பக்தா்கள் வந்தவண்ணம் இருந்தனா்.

மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசை என அனைத்து வழிகளிலும் பக்தா்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் காத்திருந்தனா். இரவு தங்கத்தோ் புறப்பாட்டின் போது தோ் சுற்றி வரமுடியாத அளவு பக்தா்கள் கூட்டம் இருந்தது. சாதாரணமாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரமானது. முக்கிய பிரமுகா்களுக்கான தரிசன வரிசையில் போலீஸாா் அவா்களுக்கு வேண்டிய நபா்களை அனுப்பி வைத்ததால் அந்த வழியில் நின்றி பக்தா்கள் கூடுதல் சிரமத்துக்கு ஆளாகினா். கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள், வயதானவா்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com