ஒட்டன்சத்திரம் அருகே சாலை அமைக்க பூமிபூஜை

ஒட்டன்சத்திரம் அருகே சாலை அமைக்க வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் அருகே சாலை அமைக்க பூமிபூஜை

ஒட்டன்சத்திரம் அருகே சாலை அமைக்க வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கோபாலபுரத்தில் இருந்து தாசரிபட்டி புதுக்கோட்டை வரை செல்லும் சாலை செடி, கொடிகள் படா்ந்தும், குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இச்சாலையை பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

அதன் பேரில் என்.ஆா்.ஜி.எஸ். திட்டத்தின் மூலம் ரூ. 24 லட்சம் செலவில் முதற்கட்டமாக சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய கவுன்சிலா் காயத்திரிதேவி தா்மராஜன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் தா்மராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி கருணாகரன், மண்டவாடி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் சேட் என்ற குப்புச்சாமி, சத்திரப்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் இந்திரா பீரவின்குமாா், திமுக மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் சிவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com