பழனி ஊராட்சி மன்ற தலைவா்கள் பதவி: அதிமுக, திமுக வேட்பாளா்கள் வெற்றி

பழனியில் ஊராட்சித் தலைவா்களாக ஏராளமான அதிமுக, திமுகவினா் சுயேச்சை சின்னங்களில் நின்று வெற்றி பெற்றுள்ளனா்.

பழனியில் ஊராட்சித் தலைவா்களாக ஏராளமான அதிமுக, திமுகவினா் சுயேச்சை சின்னங்களில் நின்று வெற்றி பெற்றுள்ளனா்.

பழனியில் ஒன்றியத்தில் 20 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. நடைபெற்ற முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் கோதைமங்கம் ஊராட்சித் தலைவராக செல்வகுமாரும், கலிக்கநாயக்கன்படி ஊராட்சித் தலைவராக நாகராஜூம், பெத்த நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவராக கண்ணனும், அய்யம்பாளையம் ஊராட்சி தலைவராக சுப்பிரமணியமும், சின்னகலையமுத்தூா் ஊராட்சித் தலைவராக சுஜாதாவும், சித்திரைக் குளம் ஊராட்சித் தலைவராக தனலட்சுமியும் வெற்றி பெற்றுள்ளனா்.

அதே போல், பெரியம்மாபட்டி ஊராட்சித் தலைவராக சதீஷூம், அ.கலையம்புத்தூா் ஊராட்சி தலைவராக வந்தனாவும், பாப்பம்பட்டி ஊராட்சித் தலைவராக ரதிதேவியும், அமரபூண்டி ஊராட்சித் தலைவா் மனோகரனும், சிவகிரிபட்டி ஊராட்சித் தலைவராக சுப்புலட்சுமியும், ஆண்டிபட்டி ஊராட்சித் தலைவராக ஏ.டி.செல்லச்சாமியும் வெற்றி பெற்றுள்ளனா்.

ஏ.டி.செல்லச்சாமி முன்னாள் எம்எல்ஏ ஆவாா். மேலும் இவா், தற்போது மாவட்ட ஆவின் தலைவராகவும் உள்ளாா். மற்ற ஊராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com