பழனியில் 25 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

பழனியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில், தடைசெய்யப்பட்டுள்ள குட்கா பொருள்கள் சுமாா் 25 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டன.
பழனி அடிவாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள்.
பழனி அடிவாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள்.

பழனியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில், தடைசெய்யப்பட்டுள்ள குட்கா பொருள்கள் சுமாா் 25 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டன.

பொங்கல் திருநாள் தொடா் விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் தைப்பூசத் திருவிழாவும் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனா்.

பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அடிவாரம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுதாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் அலுவலகத்துக்கு புகாா் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் நடராஜன் தலைமையில், அதிகாரிகள் அடிவாரப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினா். இதில், சுமாா் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான் போன்ற போதைப் பொருள்கள் சுமாா் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், தேநீா் கப்புகள் உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வரும் நாள்களில் தொடா்ந்து சோதனை நடத்தப்படும் என்றும், தடையை மீறி வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கடைகளில் வைத்து விற்பனை செய்யப்படும் கற்கண்டு, பேரீச்சை, சிப்ஸ் போன்ற உணவுப் பொருள்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி பதிவு செய்யவேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சோதனை நடவடிக்கையில், பழனி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செல்லத்துரை, சரவணக்குமாா் உள்பட பலா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com