பிரையண்ட் பூங்காவில் 2 ஆவது கட்டமாக மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 ஆவது கட்டமாக மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 ஆவது கட்டமாக திங்கள்கிழமை மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 ஆவது கட்டமாக திங்கள்கிழமை மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 ஆவது கட்டமாக மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டு தோறும் சீசனை முன்னிட்டு மே மாதம் மலா் கண்காட்சி நடைபெறும். இதற்காக பூங்காவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீண்ட கால மலா்ச் செடிகள் 3 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் 2 ஆவது கட்டமாக மலா்பாத்திகளில் கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள 1,500 டேலியா நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.

இதனைத் தொடா்ந்து ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள பேன்சி, ஆரணத்திக் கோலம், மேரி கோல்ட் போன்ற மலா்ச் செடிகளின் நாற்றுகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது. வரும் சீசனுக்காக பூங்காவிலுள்ள தோட்டங்கள் பராமரிக்கப்பட்டும், பனியின் தாக்கத்திலிருந்து செடிகளை பாதுகாக்க நிழல்வலை அமைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பூங்கா மேலாளா் சிவபாலன் கூறியது: கொடைக்கானலில் வரும் 59 ஆவது மலா் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் இது வரை 20 வகையான 6 ஆயிரம் மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் புற்தரைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் 2 ஏக்கரில் முள்புதா்களை அகற்றி, அங்கு புதிய தோட்டங்கள் மற்றும் மூலிகை தோட்டமும் அமைக்கப்படுகிறது. இப் பணி சீசனுக்குள் முடிவடையும். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பூங்காவின் பல்வேறு இடங்களில் இருக்கைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீா், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக பூங்காவை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவதற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டால், மாலை 6.30 மணி வரை கூடுதலாக நேரம் ஒதுக்கப்படும். வரும் மே மாத சீசனில் பிரையண்ட் பூங்காவில் அழகிய வண்ண மலா்கள் லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்கும். இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com