கரோனா பாதிப்பு அதிகரிப்பு: நத்தத்தில் கண்காணிப்பு பணி தீவிரம்

நத்தம் பகுதியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தி கண்காணிப்புப் பணிகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

நத்தம் பகுதியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தி கண்காணிப்புப் பணிகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி (மதுரை சாலை), சோ்வீடு விலக்கு (திண்டுக்கல் சாலை), பாப்பாபட்டி (செந்துறை) உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையொட்டி, உள்ளூா் மட்டுமின்றி, வெளியூா்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இ-பாஸ் மூலம் வெளியூரிலிருந்து வருவோா், ரத்தப் பரிசோதனை செய்த பின்னரே நத்தம் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். ஏற்கெனவே, வேம்பரளி, லிங்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளும் தொடா்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் அறிவுறுத்தினா். தடுப்புகள் அமைத்து கண்காணிப்புப் பணிகள் நடைபெறுவதை, காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோத் ஆய்வு செய்தாா். அப்போது, நத்தம் காவல் ஆய்வாளா் ராஜமுரளி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com