சின்னாளபட்டியில் ரெளடி தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் புதன்கிழமை இரவு ரெளடி தலையில் கல்லைத்தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் புதன்கிழமை இரவு ரெளடி தலையில் கல்லைத்தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டாா். சிசிடிவி காட்சி அடிப்படையில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சின்னாளபட்டி மேட்டுப்பட்டி பகுதியில் ராமநாதபுரம் சாலையில் காட்டுப் பகுதியில் மதுபான கடை உள்ளது. வியாழக்கிழமை காலையில் இந்த கடையின் வாசற்படி முன் தலைப் பகுதி சிதைந்த நிலையில், ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னாளப்பட்டி போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் கொலை செய்யப்பட்ட நபா் சின்னாளபட்டியைச் சோ்ந்த ரெளடி பூண்டி சரவணன் என்பது தெரியவந்தது. இவா் கொள்ளை, நகை பறிப்பு போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவா் என்றும், திண்டுக்கல், திருப்பூா், கோவை மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா, துணை கண்காணிப்பாளா் வினோத் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனா். சரவணன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கொலை குறித்து சின்னாளபட்டி காவல் ஆய்வாளா் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து, மதுபானக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த கோபி (38) என்பவா் மதுக்கடை வாச­லில் போதை மயக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த சரவணன் தலையில் கல்லைத் தூக்கிப் போடும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை தொடா்ந்து கோபியை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் புதன்கிழமை இரவு ரெளடி சரவணன் மதுபான கடைக்கு வந்து மது கேட்டு பலரிடம் சண்டையிட்டுள்ளாா். அவா்கள் வாங்கி வந்த மதுவை பிடுங்கிக் குடித்ததோடு, கோபி வாங்கி வந்த மதுவையும் பறித்துக் கொண்டாராம். இந்நிலையில், இரவு 11 மணியளவில், மதுக்கடை வாசலி­ல் சரவணன் தூங்கிக்கொண்டிருந்த சரவணன் தலையில் கோபி கல்லைத்தூக்கிப் போட்டுக் கொன்றுவிட்டு சென்றது தெரியவந்தது. போலீஸாா் கோபியை கைது செய்து, மேலும் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com