ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் முருங்கை விலை வியாழக்கிழமை உயரத்தொடங்கியது.
ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் கடந்த சில தினங்களாக முருங்கைக்காய் விலை சரிவடைந்த நிலையில்,வியாழக்கிழமை அவற்றின் விலை உயரத்தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் ரூ.19-க்கு விற்ற கரும்பு முருங்கை ரூ.23-க்கும், ரூ.18-க்கு விற்ற செடி முருங்கை ரூ.19-க்கும், ரூ.12-க்கு விற்ற மர முருங்கை ரூ.14-க்கும் விற்பனையானது.