மாடுகள் ஏற்றிச் சென்ற 7 பேர் மீது வழக்கு: திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் மறியல்

பக்ரீத் பண்டிகைக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

பக்ரீத் பண்டிகைக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள், மாடுகள் வாங்கும் பணிகளில் இஸ்லாமியர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியில் 8 மாடுகள் ஏற்றிச் சென்ற 5 பேர் மீதும், கொடைரோடு பகுதியில் 15 மாடுகள்  ஏற்றி வந்த 2 பேர் மீதும் ஒட்டன்சத்திரம் மற்றும் அம்மையநாயக்கனூர்  போலீசார் வழக்குப்  பதிவு செய்து கைது செய்தனர்.

இதனை அறிந்த திண்டுக்கல்  பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், பேகம்பூர் சந்திப்பு, டிவிஏ நகர், அங்குவிலாஸ் இறக்கம் என 3 இடங்களில் வெள்ளிக்கிழமை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கைது செய்யப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்ததனர். 

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்பட்டி பொது இடத்தில் ஆடு, மாடுகள் பலியிடக் கூடாது என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறித்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஒரே நேரத்தில் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் திண்டுக்கல் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com