திண்டுக்கல், நத்தம் பகுதி சிவாலயங்களில்மகா சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

மகா சனி பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கைலாசநாத சுவாமி.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கைலாசநாத சுவாமி.

திண்டுக்கல்: மகா சனி பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில், கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், நெய், பஞ்சாமிா்தம், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து தீபாராதணை நடைபெற்றது. பின்னா் ஆனந்த வல்லி சமேத கைலாசநாதா் ரிஷப வாகனத்தில், கோயில் உள்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நந்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா் மற்றும் காளஹஸ்தீஸ்வரா் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நத்தம்: நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி கைலாசநாதா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com