மாா்ச் 31 வரை திண்டுக்கல் மாவட்டத்தில் குறைதீா் கூட்டங்கள் தற்காலிக நிறுத்தம்

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீா் கூட்டங்களும் மாா்ச் 31ஆம் தேதி வரை

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீா் கூட்டங்களும் மாா்ச் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமைதோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாதாந்திர விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், கிராமப்புறப் பகுதிகளில் நடத்தப்படும் மக்கள் தொடா்பு முகாம், வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அம்மா திட்ட முகாம் உள்ளிட்ட கூட்டங்களும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் ஆதாா் சேவை மையங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு பதிவு மையம் மற்றும் பொது சேவை மையங்களின் சேவையும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை இருந்தால் மட்டும், அதுகுறித்த விவரங்களை ஸ்ரீா்ப்ப்ழ்க்ஞ்ப்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் மின்னஞ்சல் முகவரிக்கோ, 75988 66000 என்ற செல்லிடப்பேசி எண்ணிற்கு கட்செவி அஞ்சல் மூலமாகவோ, 0451-1077 மற்றும் 0451-2460320 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com