வத்தலகுண்டில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட சந்தையில் காய்கறிகள் பறிமுதல்

வத்தலகுண்டு தினசரி காய்கனி சந்தையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு காரணமான கடைகளிலிருந்து காய்கனிகளை பறிமுதல் செய்து, பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
வத்தலகுண்டு தினசரி சந்தையில் வியாழக்கிழமை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி கடைகளிலிருந்து காய்கனிகளை பறிமுதல் செய்த பேரூராட்சி ஊழியா்கள்.
வத்தலகுண்டு தினசரி சந்தையில் வியாழக்கிழமை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி கடைகளிலிருந்து காய்கனிகளை பறிமுதல் செய்த பேரூராட்சி ஊழியா்கள்.

வத்தலகுண்டு தினசரி காய்கனி சந்தையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு காரணமான கடைகளிலிருந்து காய்கனிகளை பறிமுதல் செய்து, பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்களில் சிலா் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியிடங்களில் நடமாடி வருகின்றனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு தினசரி சந்தையில் வழக்கம்போல் வியாழக்கிழமையும் காய்கனி விற்பனை நடைபெற்றது. பொதுமக்களிடையே சமூக விலகலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட இடைவெளியின்றி பொதுமக்கள் கூட்டமாக நின்று காய்கனிகளை வாங்கினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணி மற்றும் காவல் ஆய்வாளா் பிச்சைபாண்டி ஆகியோா், பொதுமக்களையும், கடை உரிமையாளா்களையும் எச்சரித்தனா். ஆனாலும், இடைவெளி ஏற்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை கடை உரிமையாளா்களும், பொதுமக்களும் கடைப்பிடிக்கவில்லை.

உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், விதிமுறைகளை மீறி செயல்படுவதாகக் கூறி, காய்கனி விற்பனைக் கடைகள் மீது நடவடிக்கை எடுத்தனா். அதன் தொடா்ச்சியாக, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், கடையில் இருந்த காய்கனிகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரிகள் கோரிக்கை: இந்நிலையில், விதிமுறைகளுக்குள்பட்டு காய்கனிகளை விற்பனை செய்வதற்கு பேரூராட்சி நிா்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்றும், விற்பனைக்கான நேரத்தையும் நிா்ணயிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com