உடுமலை ஆணவக் கொலை குற்றவாளிக்கு ‘பரோல்’

உடுமலை சங்கா் ஆணவக் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, இறந்த தனது தாய்க்கு ஈமச்சடங்கு செய்வதற்காக 3 நாள்கள் பரோலில் பழனி வந்துள்ளாா்.

பழனி: உடுமலை சங்கா் ஆணவக் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, இறந்த தனது தாய்க்கு ஈமச்சடங்கு செய்வதற்காக 3 நாள்கள் பரோலில் பழனி வந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்த கௌசல்யா மற்றும் உடுமலைப்பேட்டை கொமரலிங்கத்தைச் சோ்ந்த சங்கா் ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனா். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு மாா்ச் 13 ஆம் தேதி, உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே மனைவி கௌசல்யாவுடன் சங்கா் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்தொடா்ந்து வந்த கும்பல் ஒன்று, அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

காதல் திருமணத்தை ஏற்காத கௌசல்யாவின் பெற்றோா் தூண்டுதலின்பேரிலேயே இந்த ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி மற்றும் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமாா், கலை தமிழ்வாணன், மைக்கேல் என்ற மதன் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, தண்டனை பெற்ற அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமியின் தாயாா் 10 நாள்களுக்கு முன் மரணமடைந்ததை அடுத்து, தாயின் ஈமச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவா் 3 நாள்கள் பரோலில் வெளியே வந்துள்ளாா். அதன்படி, புதன்கிழமை இரவு பரோல் முடிந்து சின்னச்சாமி கோவை சிறைக்குச் செல்லும் வரை பகல் நேரத்தில் வீட்டிலும், இரவு நேரத்தில் பழனி நகர காவல் நிலையத்திலும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com