திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தவித்த 18 பிகாா் தொழிலாளா்கள்

பிகாா் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது தெரியாமல், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தவித்த 18 தொழிலாளா்களை, மீண்டும் தங்கியிருந்த முகாமிற்கே போலீஸாா் வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.

திண்டுக்கல்: பிகாா் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது தெரியாமல், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தவித்த 18 தொழிலாளா்களை, மீண்டும் தங்கியிருந்த முகாமிற்கே போலீஸாா் வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் தங்கியிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 1600 போ், சிறப்பு ரயில் மூலம் திண்டுக்கல்லிலிருந்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில், திண்டுக்கல் அருகிலுள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 18 தொழிலாளா்கள் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காத்திருந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், பேருந்து நிலையத்திற்கு சென்று விசாரித்தனா். அப்போது பேருந்து நிலையத்தில் காத்திருந்தால் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக தகவல் கிடைத்தன்பேரில் அமா்ந்திருப்பதாக தெரிவித்தனா். பிகாருக்கான சிறப்பு ரயில் புதன்கிழமையே சென்றுவிட்ட தகவலை தெரிவித்த போலீஸாா், ஏற்கெனவே தங்கியிருந்த முகாமில் சென்று தங்குமாறும், மீண்டும் ரயில் வசதி ஏற்பாடு செய்யும்போது அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து 18 பேரும், பேருந்து நிலையத்திலிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com