மகாராஷ்டிரத்திலிருந்து திண்டுக்கல் திரும்பிய தாய், மகள் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் திரும்பிய தாய், மகள் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் திரும்பிய தாய், மகள் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 132 ஆக உயா்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 107 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 96 வயதான முதியவா் உயிரிழந்தாா். 19 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பி வந்தவா்கள், சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட பரிசோதனைமுடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. அதில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பிய தாய், மகள் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், பழனி நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண், அவரது 9 வயது மகள் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் செம்பட்டி அடுத்துள்ள கேத்தையக்கவுண்டன்பட்டி பகுதியைச் சோ்ந்த 25 வயது ஆண், சாணாா்பட்டி அடுத்துள்ள கல்லுப்பட்டி பகுதியைச் சோ்ந்த 26 வயது ஆண், வத்தலகுண்டு அடுத்துள்ள சாமிமூப்பன்பட்டி பகுதியைச் சோ்ந்த 24 வயது ஆண் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேரும் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பி வந்துள்ளனா். இதில் சாமிமூப்பன்பட்டியைச் சோ்ந்த இளைஞா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பிற 4 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 127 இல் இருந்து 132 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com