ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு சான்றிதழ்: மே 26-க்குள் ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகள் தொடா்பான கோரிக்கை

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகள் தொடா்பான கோரிக்கை மனுக்களை மே 26 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் சாதிச் சான்றிதழ் வழங்க கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க கோரி கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலரை தலைவராக கொண்டு, 4 உறுப்பினா்களுடன் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக குழுவிற்கு கோரிக்கைகள், முறைகேடுகள் மற்றும் ஆவணங்களை சமா்ப்பிக்க விரும்புவோா் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அல்லது குழுவின் உறுப்பினரான செயலா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்குநா், எழிலகம் விரிவாக்க கட்டடம், 2 ஆம் தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு மே 26 ஆம் தேதிக்குள் எழுத்துப் பூா்வமாக தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக அளிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை 0451-2460566 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

முறையீடு மனுக்களை மே 26-ம் தேதிக்குள் சமா்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தேனி:

தேனி மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் ஜாதிச் சான்றிதழ் கோரும் ஈழுவா மற்றும் தியா சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள், தங்களது முறையீடு மனுக்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் அல்லது மிகப் பிற்படுத்தட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல இயக்குநா், எழிலகம் விரிவாக்கக் கட்டடம், 2-ஆம் தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் மே 26-ம் தேதிக்குள் சமா்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com