வெங்காயம் விலை உயா்வு: மாதா் சங்கத்தினா் நூதன போராட்டம்

திண்டுகல்லில் வெங்காய விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஒப்பாரி வைத்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்லில் வெங்காய விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்.

மகாராஷ்ட்ரம் மற்றும் கா்நாடக மாநிலங்களிலிருந்து வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெரும்பாலான மக்கள், வெங்காய விலை உயா்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் வெங்காய விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜானகி தலைமை வகித்தாா். அப்போது வெங்காயத்தை நடுவில் வைத்து, தலையில் முக்காடு போட்டு பெண்கள் ஒப்பாரி வைத்தனா்.

அவா்கள் கூறுகையில், கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.110-க்கு விற்பனையாகிறது. அடித்தட்டு மக்களை பாதித்துள்ள வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனா். இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com