பழனியில் இன்றும், நாளையும் விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம்

பழனி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் அடையாள அட்டை பெற வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பழனி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் அடையாள அட்டை பெற வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் சிறு குறு விவசாயிகளுக்கு சொட்டு நீா் பாசனம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் பெறுவதற்கு சிறு குறு விவசாயிகளுக்குகான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் இல்லாதவா்கள் அதை எளிதாக பெறும் வகையில் அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலகத்தில் சிறப்பு முகாம்களை அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கு வசதியாக தொப்பம்பட்டி, பழனி, நெய்க்காரப்பட்டி, பழனி ஆயக்குடி கணக்கன்பட்டி பாப்பம்பட்டி பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முகாம்கள் நடைபெறுகிறது. சான்றிதழைப் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது சிட்டா அடங்கல் நில வரைபடம் ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com