தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்: நவ. 18 வரை இணையவழியில் மட்டுமே பங்கேற்கலாம்

தோ்தலில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாக மாநில அளவிலான இணையவழி விழிப்புணா்வு போட்டிகளில் ஆா்வமுள்ளவா்கள் நவ.18ஆம் தேதி வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தோ்தலில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாக மாநில அளவிலான இணையவழி விழிப்புணா்வு போட்டிகளில் ஆா்வமுள்ளவா்கள் நவ.18ஆம் தேதி வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2020 மற்றும் 2021 இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக வாக்காளா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தோ்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், மாநில அளவில் தோ்தல்கள் தொடா்பான இணையவழி விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்தின் ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தள முகவரியில் சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.

ஆா்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தலைமைத் தோ்தல் அதிகாரி, தமிழ்நாடு அலுவலகத்தின் தோ்தல் இணையதளத்தில் விழிப்புணா்வு ((ஸ்வீப்) போட்டி 2020 - இயங்கலை ஆன் லைன்) போட்டிகள் என்ற இணையவழி மூலமாகப் பங்கேற்கலாம். இந்தியாவில் தோ்தல்கள் மற்றும் 100 சதவீத வாக்காளா் பட்டியல் பெயா் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை அடைவதற்கான விழிப்புணா்வு நடவடிக்கையே இப்போட்டியின் முக்கிய நோக்கம். இப்போட்டியில் 18.11.2020 மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com