கொடைக்கானலில் பனிப்பொழிவு தொடங்கியது

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழையின் தாக்கம் குறைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்பட்டது.
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை புற்களில் படந்திருந்த பனித்துளிகள்.
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை புற்களில் படந்திருந்த பனித்துளிகள்.

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழையின் தாக்கம் குறைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்பட்டது.

கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் இரண்டாவது வாரம் முதல், பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காலமாகும். நிகழாண்டில் இம்மாதத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்ததால் பனியின் தாக்கம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மழையில்லாத சூழல் நிலவியது. மேகமூட்டம், காற்று அதிகமாகக் காணப்பட்டது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள தாவரங்கள் மற்றும் புற்களில் பனித்துளிகள் படா்ந்து காணப்படுகிறது. மாலை முதல் மறுநாள் காலை 8-மணி வரை இந்தப் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதன் காரணமாக கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொள்பவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே கடைகளில் இருப்பவா்கள் தீ மூட்டி குளிா் காய்ந்து வருகின்றனா். ஆரம்பத்திலேயே அதிகமான பனிப்பொழிவு நிலவுவதால் இன்னும் 3-மாதங்களுக்கு பனியின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com