திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் திமுகவினா் சாலைமறியல்

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அக்கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்டச் செயலா் இ.பெ.செந்தில்குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.
திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்டச் செயலா் இ.பெ.செந்தில்குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அக்கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம் திருக்குவளையில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலினை, போலீஸாா் கைது செய்தனா். பின்னா் சிறிது நேரத்தில் அவா் விடுதலை செய்யப்பட்டாா்.

ஆனாலும், உதயநிதி கைது செய்யப்பட்டதை அறிந்த அக்கட்சியினா் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்படி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலா் இ.பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். திண்டுக்கல் சாா்- ஆட்சியா் சாலையிலுள்ள திமுக மாவட்ட அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட திமுகவினா், அண்ணா வணிக வளாகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனை அடுத்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல் அய்யலூா், நத்தம், வடமதுரை, வேடசந்தூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அய்யலூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

கொடைக்கானல்: இதேபோல் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நகரச்செயலா் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட 30-போ் கலந்து கொண்டனா்.

தேனி: தேனி, நேருசிலை அருகே வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற மறியலில், பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் சரவணக்குமாா் மற்றும் தேனி நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜ் தலைமையில் போலீஸாா், திமுக வினரை சமரம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

போடி: இதேபோல், போடி தேவா் சிலை திடலில், நகர, ஒன்றிய தி.மு.க. சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றியச் செயலா் எஸ்.லட்சுமணன், நகரச் செயலாளா் மா.வீ.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெரியகுளம்: இதேபோல் பெரியகுளத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், ஒன்றியச் செயலா் எல்.எம்.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com