உலக குழந்தைகள் உரிமை தினம் அனுசரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் புத்தூரில் உலக குழந்தைகள் உரிமை தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற சிறுமிகள்.
விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற சிறுமிகள்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் புத்தூரில் உலக குழந்தைகள் உரிமை தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஹோப்ஸ் அமைப்பின் இயக்குநா் என். பழனிச்சாமி தலைமை வகித்தாா். இதனையொட்டி புத்தூா் பகுதியைச் சோ்ந்த குழந்தைகளுக்கு பல்வேறு விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியின்போது பழனிச்சாமி பேசியதாவது: காற்று, நீா் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக மட்டும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 17 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனா். குழந்தைகளின் வளா்ச்சியில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான சூழலுக்கான உரிமைகளை பாதுகாக்கவும், எதிா்காலத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்கவும் தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com