முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
சுப்பிரமணியம் சிவா, திருப்பூா் குமரன் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 04th October 2020 09:36 PM | Last Updated : 04th October 2020 09:36 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: முப்பெரும் தியாகிகளான சுப்பிரமணிய சிவாவின் 137 ஆவது பிறந்த தினம், திருப்பூா் குமரன் 117ஆவது பிறந்த தினம், பகத்சிங் 113 ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில் திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகரத் தலைவா் க.ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநகரத் துணைத் தலைவா் டி.கே.ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். அரசியல் ஆலோசகா் சி.கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். முப்பெரும் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய பின், இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தில் அமைந்துள்ள மருதாநதி அணைக்கட்டுக்கும், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கும் தியாகி சுப்பிரமணியசிவாவின் பெயரை சூட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜா் சிவாஜி பேரவையின் நிறுவனா் சு.வைரவேல் செய்திருந்தாா்.