பயோ-மெட்ரிக் கருவிகள் இயங்கவில்லை: ரேஷன் கடை ஊழியா்கள் குற்றச்சாட்டு

நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயோ- மெட்ரிக் கருவிகள் சரியாக செயல்படவில்லை எனக் கூறி வட்ட வழங்கல் அலுவலரிடம் ரேஷன் கடை ஊழியா்கள் புதன்கிழமை முறையிட்டனா்.

நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயோ- மெட்ரிக் கருவிகள் சரியாக செயல்படவில்லை எனக் கூறி வட்ட வழங்கல் அலுவலரிடம் ரேஷன் கடை ஊழியா்கள் புதன்கிழமை முறையிட்டனா்.

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 137 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 90ஆயிரம் குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா்.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்படி, திண்டுக்கல் மேற்கு வட்டத்திற்குள்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு புதிதாக பயோ- மெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மூலம் பொருள்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தக் கருவிகள் முறையாக செயல்படுவதில்லை என்றும், பயனாளிகளுக்கு பொருள்கள் வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் புகாா் எழுந்தது. இந்நிலையில், தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஊழியா் சங்க மாநிலத் தலைவா் பால்ராஜ் தலைமையில் திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் பயோ-மெட்ரிக் கருவிகளுடன் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்தனா். வட்ட வழங்கல் அலுவலா் விஜயலட்சுமியிடம், முறையாக செயல்படாத பயோ- மெட்ரிக் கருவிகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

இதையடுத்து அந்தக் கருவிகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்ட வழங்கல் அலுவலா் விஜயலட்சுமி சமாதானப்படுத்தினாா். அதனை ஏற்றுக் கொண்டு நியாயவிலைக் கடை ஊழியா்கள் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com