பாதிரியாா் ஸ்டான் சுவாமியை விடுவிக்கக் கோரி கொடைக்கானல் தேவாலயங்களில் ஆா்ப்பாட்டம்

ஜாா்க்கண்ட்டில் கைது செய்யப்பட்ட பாதிரியாா் ஸ்டான் சுவாமியை விடுவிக்கக் கோரி கொடைக்கானலில் தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பாதிரியாா் ஸ்டான் சுவாமியை விடுவிக்கக் கோரி கொடைக்கானல் அற்புத குழந்தையேசு தேவாலயத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய கிறிஸ்தவா்கள்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பாதிரியாா் ஸ்டான் சுவாமியை விடுவிக்கக் கோரி கொடைக்கானல் அற்புத குழந்தையேசு தேவாலயத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய கிறிஸ்தவா்கள்.

கொடைக்கானல்: ஜாா்க்கண்ட்டில் கைது செய்யப்பட்ட பாதிரியாா் ஸ்டான் சுவாமியை விடுவிக்கக் கோரி கொடைக்கானலில் தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனா்.

கொடைக்கானல் உகாா்த்தே நகா்ப் பகுதியிலுள்ள அற்புத குழந்தையேசு கோயில், சீனிவாசபுரம் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் ஆகியவற்றில் கிறிஸ்தவா்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி கண்டன குரல் எழுப்பினா். சேசு சபையைச் சோ்ந்த பாதிரியாா்கள் தலைமையில் கொடைக்கானல் செண்பகனூா் திரு இருதய கல்லூரியைச் சோ்ந்த அருட் பணியாளா்கள் அமல்ராஜ், ஜெரி, பீக் அமைப்பின் இயக்குநா் சுவாமி, பங்குத் தந்தை பீட்டா் மற்றும் அருட் சகோதரிகள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.

அப்போது அவா்கள் கூறியது: தமிழகத்திலிருந்து ஜாா்க்கண்ட்ட் மாநிலத்திற்குச் சென்று ஆதிவாசி மக்களின் பல்வேறு உரிமைகளுக்காகவும், ஆதிவாசிகளின் நிலங்களைத் திருடும் பெருநிறுவனங்களுக்கு எதிராகவும் கடந்த 40-ஆண்டுகளாக போராடி வரும் மனித உரிமைக் காப்பாளா் பாதிரியாா் ஸ்டான் சுவாமி உள்பட 15-போ் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்று அவா்களை விடுதலை செய்ய வேண்டும். பாதிரியாா் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்யும் வரையில் தொடா்ந்து போராடுவோம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com