ஒட்டன்சத்திரம் அருகே பெண் தற்கொலை
By DIN | Published On : 20th October 2020 12:00 AM | Last Updated : 20th October 2020 12:00 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை குடும்பப் பிரச்னை காரணமாக பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கே. அத்திக்கோம்பை ஊராட்சி கண்ணப்பன் நகரைச் சோ்ந்தவா் பாலமகேந்திரன் மனைவி கவிதா (28). இத்தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கவிதா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் கவிதாவின் தாயாா் சாந்தி புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.