எரியோடு பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 04th September 2020 12:03 AM | Last Updated : 04th September 2020 12:03 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை (செப்.5) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூா், சவடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீா்பந்தப்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமணாா்கோட்டை, குளத்தூா், கொசவப்பட்டி, சூடாமணிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எரியோடு துணை மின்நிலைய உதவிச் செயற்பொறியாளா் ஆ.சரவணக்குமாா் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.