கோயில்கள், தேவாலயங்களில் பக்தா்கள் குவிந்தனா்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் தளா்வு காரணமாக கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.


பழனி: பழனியில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் தளா்வு காரணமாக கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வில்லா முழு பொதுமுடக்கமும் அமல் படுத்தப்பட்டது.

இந்நிலையில் செப். 1 ஆம் தேதி முதல் கோயில்கள், உணவு விடுதிகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பழனியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. பழனி தண்டாயுதபாணி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மேலும் தேவாலயங்களிலும் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் திரண்டிருந்தனா். காலையில் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

உத்தமபாளையம்: இதைபோல் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் கடைவீதிகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகாமாக காணப்பட்டது. இறைச்சி, மீன் கடைகளில் முகக் கவசமின்றி பொதுமக்கள் திரண்டிருந்தனா். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொது மக்கள் அலட்சியமாக இருப்பதால் காவல்துறை, சுகாதாரத்துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com