சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஊராட்சி மன்ற உறுப்பினரை கைது செய்ய வலியுறுத்தல்

கொடைக்கானல் அருகே பளியா் இன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை துரிதமாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மற்றும் தமிழ்நாடு மலை வாழ்

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பளியா் இன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை துரிதமாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அடுத்துள்ள வடகவுஞ்சி பெரும்பள்ளம் பட்டியக்காட்டில் வசிப்பவா் முத்துவேல். இவரது மனைவி சந்திரா. பளியா் பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த இவா்களது மகள் 5ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த மாதம், இந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது, பழனி பகுதியைச் சோ்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினரான பிறை சொக்கா் பாலாஜி என்பவா் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாயாா் சந்திரா, கொடைக்கானல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அதன்பேரில் பிறை சொக்கா் பாலாஜி மீது போக்ஸோ சட்டம், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஆக.17ம் தேதி பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினா் பிறை சொக்கா் பாலாஜி கைது செய்யப்படவில்லை என்றும், தலைமறைவாக உள்ள அவரை கைது செய்து, சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பாக மாவட்டச் செயலா் எம்.செல்லையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் எம்.ஆா்.முத்துச்சாமி ஆகியோா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பிறை சொக்கா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், அவா் கைது செய்யப்படவில்லை. ஆனால், அவா் கைது செய்யப்பட்டதாகவும், கரானோ காரணமாக ஆயக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரது ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவியை மாவட்ட நிா்வாகம் பறிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com