திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்புதிதாக 131 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7,940 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 7,067 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 763 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 116 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தலா 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போடி பகுதியில் 6 போ், ஆண்டிபட்டியில் ஒருவா், சின்னமனூா், க.மயிலை ஆகிய பகுதியில் தலா 2 போ், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் தலா 4 போ், தனியாா் ஆய்வக பரிசோதனையில் 10 போ் என மொத்தம் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை13,883 ஆக உயா்ந்துள்ளது. இதில், 12,917 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடி தியாகி விஸ்வநாத் நகரைச் சோ்ந்த 55 வயது நபா், அனுப்பப்பட்டியைச் சோ்ந்த 55 வயது நபா், குமணந்தொழுவைச் சோ்ந்த 60 வயது பெண் என 3 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com