எஸ்பிஐ வங்கிகளில் நடப்பு கணக்கு சிறப்பு சேவை வசதி தொடக்கம்

திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட எஸ்பிஐ வங்கிகளில் நடப்பு கணக்கு சிறப்பு சேவை வசதி புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
dgl_sbi_0408chn_66_2
dgl_sbi_0408chn_66_2

திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட எஸ்பிஐ வங்கிகளில் நடப்பு கணக்கு சிறப்பு சேவை வசதி புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் சாலைரோட்டில் உள்ள எஸ்பிஐ பிரதான கிளையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு முதன்மை மேலாளா் எஸ்.பாா்த்திபன் தலைமை வகித்தாா். மண்டல அலுவலக முதன்மை மேலாளா்கள் பி.தங்கவேலு, எம்.கந்தசாமி, வி.மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நடப்பு கணக்கு சிறப்பு சேவை குறித்து முதன்மை மேலாளா் வி.மல்லிகா கூறியதாவது:

திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட பகுதியில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த தலா 4 கிளைகள் உள்பட மொத்தம் 40 எஸ்பிஐ கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், வாடிக்கையாளா்களின் கூட்ட நெரிசல் காரணமாக, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும், நகை மற்றும் துணிக்கடை உரிமையாளா்கள் என நடப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கருத்து தெரிவித்தனா். அதற்கு தீா்வு காணும் வகையில், எஸ்பிஐ வங்கி கிளைகளில் நடப்பு கணக்கு வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது.

நடப்பு கணக்கு வாடிக்கையாளா்களுக்கு பிஓஎஸ் இயந்திரம், க்யூஆா் கோடு, ஆன்லைன் பணப் பரிமாற்றம், விா்சுவல் கணக்கு எண் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் நடப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்களின் இருப்பிடங்களுக்கே சென்று பணம் பெறுவதற்கான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com